» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பேங்க் ஆஃப் பரோடா உட்பட 3 பொதுத் துறை வங்கிகள் இணைப்பு : நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அறிவிப்பு

செவ்வாய் 18, செப்டம்பர் 2018 12:36:07 PM (IST)

பேங்க் ஆஃப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி ஆகிய மூன்று பொதுத் துறை வங்கிகளை இணைக்க உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்துள்ளார்.

இந்த திட்டம் குறித்து  நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பேங்க் ஆஃப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி ஆகிய மூன்று பொதுத் துறை வங்கிகளை ஒருங்கிணைத்து நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய வங்கியை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வங்கிகளின் வலிமையான மற்றும் நீடித்த வளர்ச்சியை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த வங்கிகள் ஒன்றிணைக்கப்படுவதன் மூலம் அவற்றின் கடன் வழங்கும் திறன் மற்றும் வாடிக்கையாளர் சேவை சிறப்பான அளவில் மேம்படும். 

இது பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும். தற்போதைய நிலையில் வங்கிகளின் கடன் வழங்கும் நடவடிக்கைகள் மிக மோசமான நிலையில் இருந்து வருகிறது. இதனால், பெரு நிறுவனத் துறைக்கான முதலீடுகள் மிகவும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இது தவிர, பல வங்கிகள் அளவுக்கு அதிகமாக கடன் வழங்கியது மற்றும் அவற்றின் வாராக் கடன் அளவு விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்தது ஆகியவற்றால் அவை மிகவும் பலவீனமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. எனவே, இந்த வங்கிகளை இணைப்பதன் மூலம் அவற்றின் செயல்பாடு சிறப்பான வகையில் மேம்படும் என்றார்.

தேனா வங்கி, விஜயா வங்கி, பேங்க் ஆஃப் பரோடா இணைப்புக்கு பிறகு உருவாகும் நிறுவனத்துக்கு தேவையான மூலதன ஆதரவை மத்திய அரசு உறுதியாக வழங்கும். பணியாளர்கள் நலன்களும் பாதுகாக்கப்படும் என்று நிதி சேவைகள் செயலர் ராஜீவ் குமார் தெரிவித்தார். இணைப்புக்குப் பிறகு அந்த மூன்று வங்கிகளும் தன்னிச்சையான செயல்பாட்டை தொடர்ந்து மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory