» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு: கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி

செவ்வாய் 18, செப்டம்பர் 2018 12:19:50 PM (IST)

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிக்கியுள்ள கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 

ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டு முதலீடுகளை பெறுவதற்கு அன்னிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் வழங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ப.சிதம்பரம் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. 

இந்நிலையில் 35 நாள் பயணமாக வெளிநாடு செல்ல கார்த்தி சிதம்பரம் அனுமதி கோரியுள்ளார். அவரது இந்த பயணம் நவம்பர் மாதம் இறுதியில் தான் முடியும் என்பதால் ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கு விசாரணையில் தாமதம் ஏற்படும். இந்நிலையில் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கின் விசாரணைக்கு கார்த்தி சிதம்பரம் ஒத்துழைக்கவில்லை. அவர் வெளிநாடு செல்ல இனிமேல் அனுமதிக்கக் கூடாது என உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது தமது மகளை கல்வி நிறுவனத்தில் சேர்க்க வெளிநாடு செல்ல வேண்டும் என கார்த்தி சிதம்பரம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி அளித்துள்ளது. செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory