» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்தியாவில் கஞ்சா விற்பனையை சட்டப்பூர்வமாக்க வேண்டும்: பாலிவுட் நடிகர் வேண்டுகோள்

வெள்ளி 14, செப்டம்பர் 2018 4:02:39 PM (IST)

இந்தியாவில் கஞ்சா விற்பனையை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று  பாலிவுட் நடிகர் உதய் சோப்ரா வேண்டுகோள் விடுத்துள்ளார். 

பாலிவுட்டின்  பிரபல இயக்குநர் யஷ் சோப்ராவின் மகன் உதய் சோப்ரா. பிரபல இந்தி நடிகரான இவர் 2000-ஆம் ஆண்டு ஷாருக்கான் நடித்த மொஹபத்தீன் திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் தூம், நீல் அண்ட் நிக்கி, பியார் இம்பாஸிபிள் உள்ளிட்ட பல்வேறு படங்களில்நடித்துள்ளார். கடைசியாக 2013- ஆம் ஆண்டு தூம் படத்தின் மூன்றாவது பாகத்தில் நடித்தார்.  இந்நிலையில் இவர் இந்தியாவில் கஞ்சா விற்பனையை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இதுதொடர்பாக இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: இந்தியாவில் கஞ்சா விற்பனையை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். முதலாவதாக இது நமது கலாச்சாரத்தில் ஒரு பகுதியாக உள்ளது. அத்துடன் விற்பனை சட்டப்பூர்வமாக்கப்பட்டு வரி விதிக்கப்பட்டால் நமக்கு நிறைய வருவாய் கிடைக்கும்.  அத்துடன் இதனுடன் சேர்ந்துள்ள குற்றச் செயல்பாடுகளையும் ஒழிக்க முடியும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. மிக முக்கியமாக அதில் நிறைய மருத்துவ பலன்களும் உள்ளது. நான் இதனை பயன்படுத்துவதில்லை. ஆனால் கஞ்சா செடியுடனான நமது வரலாற்றைப் பார்க்கையில் இது ஒரு சிறந்த நடவடிக்கையாக இருக்கும் என்று தோன்றுகிறது எனஅவர் கருத்து தெரிவித்துள்ளார்.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory