» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

உத்திரபிரதேசத்தில் குடிபோதையில் விஷப்பாம்பை சாப்பிட முயன்றவர் பரிதாப சாவு

புதன் 12, செப்டம்பர் 2018 6:55:38 PM (IST)

உத்திரபிரதேச மாநிலத்தில் குடிபோதையில் உயிருடன் இருந்த விஷப்பாம்பை சாப்பிட முயன்றவர் பரிதபமாக உயிரிழந்தார். 

உத்தர பிரதேசத்தின் அம்ரோஹா மாவட்டத்தை சேர்ந்தவர் மஹிபால் சிங். இவர் அதிகமாக மதுஅருந்திவிட்டு போதையில்  தெருவில் இருந்த கொடிய விஷம் கொண்ட பாம்புடன் விளையாடியுள்ளார். இதைப்பார்த்த அந்த கிராமவாசிகள், அவரை கொடிய விஷம் கொண்ட பாம்பை சாப்பிடும் படி தூண்டியதாகவும் அவரும் அந்த பாம்பை தனது வாயின் அருகே கொண்டு சென்றுள்ளார். 

அப்போது பாம்பு அவரை கடித்துவிட்டு, கையில் இருந்து நழுவி தப்பிச்சென்றுள்ளது. இந்நிலையில் இச்சம்பவத்தை சுற்றியிருந்தவர்கள் தங்களின் மொபைல் போனில் படம் பிடித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ வேகமாக பரவியுள்ளது. பாம்பை சாப்பிட முயன்ற மஹிபால் சிங், 4 மணி நேரத்துக்கு பின் அவரது வீட்டில் விஷத்தால் உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory