» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நிவாரண பொருள் கொண்டு சென்ற சீமான் கைதுக்கு பாஜகதான் காரணம்? நாம் தமிழர்க‌ட்சி குற்றச்சாட்டு!

ஞாயிறு 26, ஆகஸ்ட் 2018 11:14:46 AM (IST)கேரளாவில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேரளா போலீசாரால் கைது செய்யப்பட்டதற்கு, அம்மாநில பாஜக நிர்வாகிகள்தான் காரணம் என்று நாம் தமிழர் நிர்வாகிகள் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

கேரளாவில் வெள்ள பாதிப்புகள் நிவாரண பொருட்கள் வழங்க நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேரளாவிற்கு இன்று காலை சென்றுள்ளார். வாகனம் நிறைய பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார். அப்பகுதியில் போலீசாரின் வெடிகுண்டு சோதனை வாகனம் வரவழைக்கப்பட்டு பொருட்கள் கொண்டு செல்லப்பட்ட வாகனம் முழுவதும் சோதனை செய்யப்பட்டது. பின்னர், சீமானை கேரளா போலீசார் கைது செய்து அவரிடம் 2 மணி நேரம் விசாரித்தனர்.  போலீஸ் விசாரணைக்கு பின் சீமான் விடுவிக்கப்பட்டார்.

பாஜக நிர்வாகிகள்தான் காரணம்

இந்நிலையில் சீமான் கேரளா போலீசாரால் கைது செய்யப்பட்டதற்கு, அம்மாநில பாஜக நிர்வாகிகள்தான் காரணம் என்று நாம் தமிழர் நிர்வாகிகள் குற்றச்சாட்டு வைத்துள்ளார். நாங்கள் சென்ற வாகனத்தை கேரளா பாஜக நிர்வாகிகள் மரித்தனர். எங்கள் வாகனத்தில் விடுதலை புலிகளின் கொடி, பிரபாகரனின் புகைப்படம் இருந்தது. இதை பார்த்து அவர்கள் பிரச்சனை செய்தனர். போலீசையும் அழைத்தனர். எங்கள் மீது சந்தேகம் இருப்பதாக கூறி விசாரிக்க சொன்னார்கள். இதனால்தான் போலீஸ் எங்களை கைது செய்தது. சீமான் கைதுக்கு, கேரளா பாஜகதான் காரணம் என்று குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.மக்கள் கருத்து

உண்மைAug 26, 2018 - 08:12:43 PM | Posted IP 141.1*****

நீங்க ஏன் விடுதலைப் புலி கொடியோடயும் பிரபாகரன் படத்தோடயும் போனீங்க?

கேட்ச்Aug 26, 2018 - 11:54:15 AM | Posted IP 141.1*****

நல்லது தான், நீ தமிழ்நாட்டிலேயே அரசியல் பண்ணு. . . தமிழ்நாட்டுலயே உன்னைய இன்னும் மக்கள் ஏற்றுக்கொள்ள வில்லை.. அதுக்குள்ள எதுக்கு.... பேசுனா பேச்செல்லாம் இன்னும் மக்கள் மறந்திருக்க மாட்டாங்க...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory