» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க தயாரா? பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் சவால்

செவ்வாய் 14, ஆகஸ்ட் 2018 5:35:09 PM (IST)

பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க தயாரா? என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ், சவால் விடுத்துள்ளளது. 

2019-ல் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும் போது 11 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்களை நடத்த பா.ஜனதா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாராளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று சட்ட ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ள பா.ஜனதா தலைவர் அமித்ஷா, இவ்விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் கருத்து அரசியலுக்காக கூறப்படுவதாகவே தெரிகிறது என்று குறிப்பிட்டுள்ளார். 

இந்நிலையில் பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க தயாரா? என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ், சவால் விடுத்துள்ளளது. காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் அசோக் கெலாட் பேசுகையில், "விரைவில் வரவிருக்கும் மாநில சட்டசபைத் தேர்தல்களை ஒத்திவைப்பதும், 2019 பாராளுமன்றத் தேர்தலுடன் நடத்துவதும் அரசியலமைப்பின்படி சாத்தியம் கிடையாது. மிசோரம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் சட்டசபை காலம் முடிவதற்கு தேர்தலை நடத்தியாக வேண்டும். இப்போது ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவதற்கு ஒரே வழி மட்டுமே உள்ளது. பிரதமர் மோடி பாராளுமன்றத்தை கலைக்க வேண்டும். 

4 மாநில சட்டசபையுடன், பாராளுமன்ற தேர்தலையும் சந்திக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியும் அதனை வரவேற்கும். நாங்கள் தயாராக உள்ளோம், மத்திய அரசு தன்னுடைய தோல்வியில் இருந்து மக்களுடைய கவனத்தை திசைத்திருப்பும் முயற்சியாக ஒரே தேசம், ஒரே தேர்தல் என்று கோஷமிடுகிறது என்று கெலாட் விமர்சனம் செய்துள்ளார் . 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory