» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
யானைகள் வழித்தடத்தில் உள்ள 27 ரிசார்ட்டுகளுக்கு சீல் வைக்க உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
வெள்ளி 10, ஆகஸ்ட் 2018 9:11:47 AM (IST)
முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் யானை வழித்தடங்களில் அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ள 27 விடுதிகளுக்கு 48 மணி நேரத்தில் சீல் வைக்கும்படி உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட சீகூர், சிங்காரா மற்றும் முதுமலை வனப்பகுதிகளில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. யானைகளின் வழித்தடங்களாக மசினகுடி, மாவநல்லா, வாழைத்தோட்டம், பொக்காபுரம் போன்ற பகுதிகள் இருந்து வருகின்றன. இப்பகுதியில் 300க்கும் மேற்பட்ட தனியார் காட்டேஜ், ரிசார்ட்டுகள் உள்ளன. பெரும்பாலான ரிசார்ட், நில உரிமையாளர்கள் வன விலங்குகள் தங்கள் நிலங்களுக்குள் நுழையாமல் இருக்க தடுப்பு சுவர்கள், முள் வேலிகள் மற்றும் மின் வேலிகளை அமைத்திருந்தனர்.
இதனால், யானைகளின் வழித்தடங்கள் மறிக்கப்பட்டு யானைகள் உணவிற்காகவும், இனப்பெருக்கத்திற்காகவும் இடம் பெயர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை வக்கீல் யானை ராஜேந்திரன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘மசினக்குடி சுற்று பகுதிகளில் யானை வழித்தடங்கள் மறிக்கப்பட்டுள்ளன. எனவே, அப்பகுதியில் யானை வழித்தடங்களில் உள்ள ரிசார்ட்டுகள் மற்றும் விவசாயிகளை அகற்ற வேண்டும்’ என குறிப்பிட்டிருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் இது குறித்து விசாரிக்க உயர் அதிகாரிகள் கமிட்டியை நியமித்து பொதுமக்களின் ஆட்சேபனைகளை கேட்க உத்தரவிட்டது. இதையடுத்து, 2010ல் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. சென்னை உயர் நீதிமன்றம் அமைத்த கமிட்டி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றது. பின் யானைகள் வழித்தடம் தொடர்பான வரைபடம் வெளியிடப்பட்டது. கடந்த 8 ஆண்டுகளாக யானைகள் வழித்தட பகுதிகளில் உள்ள காட்டேஜ், ரிசார்ட்டுக்களின் வேலிகள் மட்டுமே அகற்றப்பட்டன. கட்டிடங்கள் ஏதும் அகற்றப்படவில்லை. இதையடுத்து, பலரும் உச்ச நீதிமன்றத்தை நாடினர். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் மதன் பி லோகூர், அப்துல் நசீர், தீபக் குப்தா ஆகிய 3 பேர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘மசினகுடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் யானை வழித்தடமாக கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள 27 கட்டிடங்களை 48 மணி நேரத்திற்குள் மாவட்ட நிர்வாகம் மூடி சீல் வைக்க வேண்டும். மேலும், 300க்கும் மேல் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களின் உரிமையாளர்கள் அனுமதி பெற்றிருந்தால், அதற்கான ஆவணங்களை 48 மணி நேரத்திற்குள் (நேற்று முதல்) மாவட்ட நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். 48 மணி நேரத்திற்குள் அனுமதி பெற்றதற்கான சான்றுகள் அளிக்காவிட்டால் கட்டிடங்களை அகற்ற வேண்டும்’ என தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மத்தியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அயோத்தியில் ராமர் கோயில் - காங்கிரஸ் பொதுச்செயலாளர் உறுதி
சனி 23, பிப்ரவரி 2019 8:45:45 AM (IST)

புல்வாமா தாக்குதல் நடந்தபோது பிரதமர் மோடி படப்பிடிப்பில் பிஸியாக இருந்தார் : காங்கிரஸ் சாடல்
வெள்ளி 22, பிப்ரவரி 2019 10:20:04 AM (IST)

வெளிநாடுவாழ் இந்தியர்கள் ஆன்லைன் மூலம் வாக்களிக்க முடியாது: தேர்தல் ஆணையம் திட்டவட்டம்
வெள்ளி 22, பிப்ரவரி 2019 10:09:19 AM (IST)

11 லட்சம் பழங்குடிகளை காடுகளில் இருந்து வெளியேற்றுங்கள்: உச்சநீதிமன்றம் உத்தரவு
வியாழன் 21, பிப்ரவரி 2019 5:05:36 PM (IST)

ஜம்முவில் புல்வாமா தாக்குதல் பாதிப்பிலிருந்து இயல்பு நிலை திரும்பியது: ஊரடங்கு உத்தரவு நீக்கம்!!
வியாழன் 21, பிப்ரவரி 2019 4:15:26 PM (IST)

நளினி சிதம்பரம் தொடர்புடைய சாரதா சிட்பண்ட் வழக்கு: உச்ச நீதிமன்ற நீதிபதி திடீர் விலகல்!!
புதன் 20, பிப்ரவரி 2019 5:51:27 PM (IST)
