» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பிச்சை எடுக்க எவரும் விரும்பவில்லை,தேவைக்காக எடுக்கிறார்கள் : டெல்லி உயர்நீதிமன்றம்

வியாழன் 9, ஆகஸ்ட் 2018 6:46:37 PM (IST)

டெல்லியில் பிச்சை எடுப்பது கிரிமினல் குற்றமாகாது என்று தெரிவித்த அந்த மாநில உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக கொண்டு வரப்பட்டுள்ள சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தது.

பிச்சை எடுப்பது கிரிமினல் குற்றம் என மும்பை பிச்சை எடுப்பு தடுப்பு சட்டத்தை மகாராஷ்டிர அரசு கொண்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பிச்சை எடுப்பது அவர்களின் அடிப்படை உரிமை என்று உத்தரவிடக் கோரியும் ஹர்ஷ் மந்தர், கர்நிகா சாஹே ஆகிய இருவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.இந்த மனுக்கள் மீதான விசாரணை தலைமை நீதிபதி (பொறுப்பு) கீதா மித்தல், நீதிபதி ஹரிசங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணை நடைபெற்றது. 

இந்நிலையில் தலைமை நீதிபதி இன்று இந்த வழக்கு குறித்து தெரிவித்ததாவது: பிச்சை எடுப்பது குற்றம் என்று கூறுவது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. ஆகையால், பிச்சை எடுப்பது கிரிமினல் குற்றம் என்றும் அதில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொண்டு வரப்பட்ட சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மேலும் தில்லியில் கட்டாயப்படுத்தி பிச்சை எடுக்க வற்புறுத்துபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வகையில் டெல்லி அரசு தனியாக சட்டம் கொண்டு வரலாம் என்று தெரிவித்தது. 

மேலும், பிச்சை எடுப்பது ஒருவர் தேர்ந்தெடுத்து செய்யும் செயல் அல்லது என்றும், வேறு வழியே இல்லாத நிலையில் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள் என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. பிச்சை எடுப்பதற்கு ஒருவர் விரும்புவதில்லை, தேவைக்காகவே பிச்சை எடுக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டது.


மக்கள் கருத்து

ஒருவன்Aug 9, 2018 - 10:17:20 PM | Posted IP 162.1*****

அதான் லஞ்சமும் பிச்சையும் இரண்டும் ஒன்னு தான்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory