» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கருணாநிதிக்காக வரலாற்றில் முதல்முறை: பாராளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

புதன் 8, ஆகஸ்ட் 2018 1:46:55 PM (IST)

திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று ஒருநாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

காவேரி மருத்துவமனையில் 10 நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி, நேற்று மாலை 6.10 மணிக்கு உயிரிழந்தார். இதையடுத்து கருணாநிதியின் உடல் சென்னை ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், அரசியல் கட்சியினர், திரைத்துறையினர் என பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

இந்நிலையில், கருணாநிதி மறைவையொட்டி, பாராளுமன்ற இரு அவைகளும் இன்று ஒருநாள் முழுவதும் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் இறுதியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. பாராளுமன்றம் இன்று கூடியதும், இரு அவைகளிலும் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர்.   நாடாளுமன்ற வரலாற்றிலேயே முதல் முறையாக எம்.பி.யாகவோ, அல்லது முன்னாள் எம்.பி.யாகவோ இல்லாத மறைந்த முதல்வர் கருணாநிதிக்காக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முதல்முறையாக நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory