» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பாவமன்னிப்பு கேட்க வந்த பெண் பாலியல் பலாத்காரம்: பாதிரியார் போலீசில் சரண்!!

வியாழன் 12, ஜூலை 2018 4:03:28 PM (IST)

கேரளாவில், பாவ மன்னிப்பு கேட்க வந்த பெண்ணிடம் பலமுறை பாலியல் வன்முறையில் ஈடுபட்ட 3 பாதிரியார்களில் ஒருவர் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.

மலங்காரா சிரியன் ஆர்த்தோடக்ஸ் பாதிரியார்கள் மூவரில் ஒருவர் மட்டும் இவ்வழக்கில் சரணடைந்துள்ளார். பாதர் ஜோப் மேத்யூ, இரண்டாவது குற்றஞ்சாட்டப்பட்டவர், குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் இன்று சரணடைந்ததாகவும் அவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர். பாதிரியார்கள் மூவரும், பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததுடன், பெண்ணை மிக மோசமாக நடத்தியுள்ளதை பார்க்கமுடிகிறது என்பதால் இவர்களுக்கு முன்ஜாமீன் தர இயலாது என்று கேரளா உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக நேற்று மறுத்துவிட்டது.

இந்நிலையில் ஜாமீன் மறுத்துவிட்டதைத் தொடர்ந்து இன்று ஒரு பாதிரியார் போலீஸிடம் சரணடைந்துள்ளார். கேரள போலீசின் குற்றவியல் பிரிவு நீதிமன்றத்தில் ஐந்து பாதிரியார்களில் நான்கு பேருக்கு எதிராக பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுகளைச் சுமத்திய உடனேயே பாதிரியார்கள், ஆப்ரகாம் வர்கீஸ் என்கிற சோனி, ஜோப் மேத்யூ மற்றும் ஜாய்ஸ் கே ஜியார்ஜ் நீதிமன்றத்தை அணுகினர். பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலம் பெற்றப்பட்ட பிறகு இந்த பாதிரியார்களுக்கு எதிராக குற்றவியல் பிரிவால் எப்ஐஆர் வழக்கு பதியப்பட்டது.

கடந்த மாதம் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர், பாவமன்னிப்பு கேட்க வந்த தனது மனைவியை மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக ஐந்து பாதிரியார்கள் மீது குற்றச்சாட்டை சுமத்தினார். இவரது மனைவியிடம் பாதிரியார்கள் நடந்துகொண்டது பற்றி உயரதிகாரிகள் பேசும் நம்பகமான உரையாடல் அடங்கிய ஆடியோ பதிவு சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory