» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

காவலர் உடற்தகுதி தேர்வு: 10 கிலோ மீட்டர் ஓடி மயங்கி விழுந்த வாலிபர் உயிரிழப்பு!!

வியாழன் 12, ஜூலை 2018 9:13:07 AM (IST)

ஜார்கண்டில் காவலர் உடற்தகுதி தேர்வில் 10 கிலோ மீட்டர் ஓடியதில் மயங்கி விழுந்த 6 பேரில் ஒரு வாலிபர் உயிரிழந்து விட்டார்.

ஜார்கண்டில் இந்திய ரிசர்வ் பட்டாலியன் படைக்கு ஜூலை 2ந்தேதியில் இருந்து ஜூலை 21ம் தேதி வரை ஆட்கள் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. ஜார்கண்டின் ஜாம்ஷெட்பூரில் சித்கோரா பகுதியில் ஜே.ஏ.பி. மைதானத்தில் நடந்த உடற்தகுதி தேர்வில் ஒரு மணி நேரத்திற்குள் 10 கிலோ மீட்டர் தொலைவு ஓடும்படி தேர்வுக்கு வந்திருந்தவர்களிடம் கூறப்பட்டு உள்ளது.  தேர்வில் கலந்து கொண்ட பொகாரோ பகுதியை சேர்ந்த ராஜேஷ் குமார் ஷா என்பவர் உள்பட 6 பேர் மைதானத்தில் மயங்கி விழுந்துள்ளனர்.

அவர்கள் எம்.ஜி.எம். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.  அவர்களில் ஷா உயிரிழந்து விட்டார். அவர் 23வது அல்லது 24வது சுற்றில் மயங்கி விழுந்து இருக்க கூடும் என காவல்துறை அதிகாரி பிரபத் குமார் கூறியுள்ளார்.  நீர் சத்து இல்லாதது அவருக்கு உடல் நல குறைவை ஏற்படுத்தி இருக்க கூடும்.  எனினும், உடற்கூறாய்வுக்கு பின்பே சரியான காரணம் தெரிய வரும் என கூறப்படுகிறது. டெல்லியில் பணிபுரிந்து வந்த ஷா நேராக தேர்வு நடைபெறும் இடத்திற்கு வந்துள்ளார் என்று போலீசார் ஒருவர் கூறியுள்ளார்.  இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory