» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பெங்களூரு ஜெயநகர் தொகுதியில் சவுமியா வெற்றி: பாஜகவின் கோட்டையைத் தகர்த்தது காங்கிரஸ்

புதன் 13, ஜூன் 2018 3:38:13 PM (IST)

கர்நாடக மாநிலம் ஜெயநகர் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா வெற்றி பெற்றார். இதன்மூலம் 10 ஆண்டுகளாக பாஜகவின் வசம் இருந்த ஜெயநகர் தொகுதியை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. 

கடந்த மே 12-ம் தேதி கர்நாடக சட்டசபை தேர்தலின்போது பெங்களூரு ஜெயநகர் தொகுதி பா.ஜனதா வேட்பாளர் விஜயகுமார் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதனால் அந்த தொகுதியில் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. கடந்த 11-ம்  தேதி அங்கு தேர்தல் நடந்தது. காங்கிரஸ் சார்பில் முன்னாள் அமைச்சர் ராமலிங்க ரெட்டியின் மகள் சவுமியாவும், பா.ஜனதா சார்பில் மரணம் அடைந்த விஜயகுமாரின் தம்பி பிரகலாத்தும் போட்டியிட்டனர்.இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி பெங்களூரு எஸ்.எஸ்.எம்.ஆர்.வி. கல்லூரியில் இன்று காலை தொடங்கியது. மொத்தம் 14 சுற்றுகளாக ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. 

இதில் தொடக்கத்தில் இருந்தே காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா ரெட்டி முன்னணியில் இருந்தார். அடுத்த 5 சுற்றுகளில் வாக்கு வித்தியாசம் குறையத் தொடங்கியது. பின்னர் ஓட்டு எண்ணிக்கை முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா ரெட்டி 2,889 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். காங்கிரஸ் வெற்றி பெற்றதால் சட்டசபையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 79 ஆக அதிகரித்தது. 2 முறை தக்க வைத்த தொகுதியை பா.ஜனதா இழந்துவிட்டது. இந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஜே.டி.எஸ். கட்சி ஆதரவு அளித்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பாஜகவின் வசம் இருந்த ஜெயநகர் தொகுதி தற்போது காங்கிரசுக்கு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory