» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

எனது ஃபிட்னஸை விட, கர்நாடகாவின் ஃபிட்னஸே முக்கியம்: பிரதமர் மோடிக்கு குமாரசாமி பதிலடி

புதன் 13, ஜூன் 2018 12:44:01 PM (IST)கிரிக்கெட் வீரர் விராட் கோலி விடுத்த உடற்பயிற்சி சவாலை ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடி, தான் வீட்டில் உடற்பயிற்சி செய்யும் விடியோவை இன்று சமூக தளத்தில் வெளியிட்டார்.

விராட் கோலியின் சவாலை தான் ஏற்றுக் கொண்டதாகவும், தான் இதே உடற்பயிற்சி சவாலை கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமிக்கு விடுப்பதாகவும் இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். கர்நாடகாவில் சமீபத்தில் நடந்த பேரவைத் தேர்தலில் பாஜக ஆட்சியமைக்க நடத்திய அனைத்து முயற்சிகளையும் காங்கிரஸுடன் கைகோர்த்துக் கொண்டு தவிடுபொடியாக்கி, முதல்வரானவர் மஜத தலைவர் குமாரசாமி. இதையடுத்து, வரும் மக்களவைத் தேர்தலிலும் மஜத - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைக்க முடிவு செய்து தற்போதே கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துவிட்டன.
 
இந்த நிலையில், புது தில்லியில் உள்ள லோக் கல்யாண் மார்க் பகுதியில் உள்ள பிரதமர் இல்லத்தில் பிரதமர் மோடி காலை நேரத்தில் தான் மேற்கொண்ட யோகா பயிற்சி, பிரணயாமம் உள்ளிட்ட உடற்பயிற்சிகளை விடியோவாக பதிவு செய்து அதனை சமூக தளத்தில் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் குமாரசாமிக்கு உடற்பயிற்சி சவாலை விடுப்பதாகவும் மோடி கூறியிருந்தார். ஆனால், இதற்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி சரியான பதிலடியைக் கொடுத்துள்ளார்.

இது குறித்து தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் குமாரசாமி கூறியிருப்பதாவது, உங்கள் சவாலை நான் மதிக்கிறேன். எனது உடல்நிலை குறித்து அக்கறை செலுத்திய உங்களுக்கு நன்றி. உடல் நலம் என்பது அனைத்துக்குமே தேவை என்பதை நான் நம்புகிறேன். எனது அன்றாட பணிகளில் யோகா பயிற்சியையும் நான் தொடர்ந்து கடைபிடித்து வருகிறேன். அதே சமயம், எனது உடல் நலனை விட, எனது மாநிலத்தின் நலனுக்கு நான் மிகவும் முக்கியத்துவம் கொடுக்கிறேன். எனது மாநிலத்தின் நலனைக் காக்க, மேம்படுத்த உங்களது ஆதரவும் தேவைப்படுகிறது என்று பதிவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து

சாமிJun 14, 2018 - 09:53:49 AM | Posted IP 162.1*****

இந்தியாவின் பிட்னெஸ் ரிப்போர்ட் கார்ட் - படிக்க தெரியவில்லை என்றால் தெரிந்தவர்களிடம் காண்பிக்கவும்

nanbanJun 13, 2018 - 05:46:07 PM | Posted IP 162.1*****

இந்தியாவின் பிட்நெஸும் சீரியஸாதான் இருக்கு.................

சாமிJun 13, 2018 - 02:52:35 PM | Posted IP 162.1*****

ஊழலின் ஒட்டுமொத்த உருவம் - உன்னுடன் காங்கிரஸ் - சேர்ந்து இருக்கிறீர்கள் - இனி கர்நாடகா - பிட்னெஸ்ஸா - சீரியஸ்தான்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory