» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வேலை தேடும் இளைஞர்களுக்காக புதிய இணையதளம் : மத்தியஅரசு தொடங்கியது

செவ்வாய் 12, ஜூன் 2018 1:41:42 PM (IST)

இளைஞர்களுக்கு உதவும் வகையில் தேசிய வேலைவாய்ப்பு சேவை இணையதளத்தை மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது.

வேலை தேடும் இளைஞர்கள் தங்களை பற்றிய தகவல்களை  கட்டணம் ஏதுமின்றி இலவசமாகப்  www.ncs.gov.in  என்ற இணைய தளத்தில் பதிவு செய்யலாம்.வேலை தேடுவோரையும், வேலை தரும் நிறுவனங்களையும் இணைக்கும் பாலமாக இந்த இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.வேலை தேடுவோர் தவிர, வேலை கொடுக்கும் நிறுவனங்கள், உள்ளூர் சேவை அளிப்பவர்கள், திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிப்பவர்கள், தனியார் நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் என வேலைவாய்ப்பு தரும் அனைவருமே பதிவு செய்யலாம். கம்ப்யூட்டர் மற்றும் இணையதள வசதி இல்லாதவர்களும் இதில் பதிவுசெய்து பலன் அடையும் வகையில் நாடு முழுவதும் உள்ள தலைமை தபால் நிலையங்களில் குறைந்த கட்டணத்தில் பதிவுசெய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory