» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மேற்குவங்க மாநில பஞ்சாயத்து தேர்தல் : வாட்ஸ்ஆப்பில் மனுதாக்கல் செய்த 5 பேர் வெற்றி

வியாழன் 17, மே 2018 8:06:24 PM (IST)

மேற்கு வங்காள மாநிலத்தில் நடந்து முடிந்த பஞ்சாயத்து தேர்தலில் வாட்ஸ்ஆப் வழியாக மனுதாக்கல் செய்த 5 பேர் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 14ம் தேதி நடந்தது. இன்று காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இதில், ஆளும் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவி க்கப்பட்டு ள்ளது. தொடர்ந்து வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டதிலிருந்து வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வந்தது. இதன் காரணமாக வாட்ஸ் அப் மூலம் வேட்புமனு தாக்கல் செய்யும் வசதிக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. 

இதற்கு தேர்தல் ஆணையமும் ஒப்புதம் வழங்கியது. அதன்படி, 9 பேட்பாளர்கள் வாட்ஸ் அப் மூலம் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில், 5 பேர் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 3 பேர் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory