» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

திருப்பதி திருமலையில் முறைகேடுகள் நடைபெறுகிறது : தலைமைஅர்ச்சகர் குற்றச்சாட்டு

வியாழன் 17, மே 2018 7:10:30 PM (IST)

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் ஒழுங்கற்ற பல முறைகேடுகள் நடைபெறுவதாகத் தலைமை அர்ச்சகர் ஏ.வி ரமணா தீட்சிதலு குற்றம் சாட்டியுள்ளார். 

உலகின் பணக்கார கோயிலில் ஒன்றாகக் கருதப்படுவது திருமலை திருப்பதி தேவஸ்தானம். திருப்பதி கோவிலின் தலைமைஅர்ச்சகர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், கோயிலின் மரியாதை மற்றும் ஒழுக்கத்தை நிலை நிறுத்து வதில் தேவஸ்தான நிர்வாகிகளுக்கு இடையில் அநீதி மற்றும் ஊழல் நடைபெற்று வருகிறது. கோயிலின் நிதியும், பழமை வாய்ந்த நகைகளும் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது.1996 வரை சரியான முறையில் கோயில் நகைகள் பராமரிக்கப்பட்டு தணிக்கை பதிவு செய்யப்பட்டது. பல தலைமுறைகளாகக் கோயில் ஊழியத்திற்குகென்று எங்களை அர்ப்பணித்து வருகிறோம். 

ஆனால், இப்பொழுது உள்ள நிர்வாகம் அதற்கு கேடு விளைவிக்கும் வகையில் நடந்துகொள்வது மிகவும் வருத்தம் அளிக்கின்றது. புதிய ஆபரணங்களை கொண்டு ஏழுமலையானுக்கு அலங்கரிக்கப்படுகிறதே தவிர பாரம்பரியமாக இருந்த பழைய நகைகள் அணிவிப்பதில்லை? அவைகள் என்னவானது என்று கூட தெரியவில்லை? இதற்கு முறையான தணிக்கை கொண்டுவந்து, அவற்றை டிஜிட்டல் மூலம் பதிவு செய்து வெளியிட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts
Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory