» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கர்நாடக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்போம்: மத்திய அமைச்சர் அனந்த் குமார்

வியாழன் 17, மே 2018 12:12:23 PM (IST)

கர்நாடக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்போம் என்று மத்திய அமைச்சர் அனந்த் குமார் தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தில்  பலத்த சர்ச்சைகளுக்கு இடையே கர்நாடக முதல்வராக பா.ஜ.க,வின் எடியூரப்பா இன்று காலை பதவியேற்றுக் கொண்டார். இதற்கு காங்கிரஸ், மஜக கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

பெரும்பான்மையில்லாத பாஜக முதல்வராக பொறுப்பேற்றதற்கு கண்டனம் தெரிவித்து சட்டப்பேரவை வளாகத்திலுள்ள காந்தி சிலை முன்பு முன்னாள் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து மத்திய அமைச்சர் அனந்த் குமார் கூறியதாவது: ஆளுநர் முடிவின் பேரிலேயே அனைத்தும் நடந்தது என நினைக்கிறேன். நாங்கள் ஆதரவை பெறுவோம். சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்போம். காங்கிரஸ் போராட்டம் நடத்த விரும்பினால் ராகுல், சோனியா, சித்தராமையாவை எதிர்த்து தான் போராட வேண்டும். ஏனெனில் அவர்கள் 3 பேரும் தான் காங்கிரசை நாசமாக்கியவர்கள் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory