» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஆளுனர் சாதகமாக முடிவெடுக்காவிட்டால் உச்சநீதிமன்றத்தை நாட காங்கிரஸ் முடிவு

புதன் 16, மே 2018 2:20:32 PM (IST)

காங்.,- ம.ஜ.த கூட்டணிக்கு ஆதரவாக ஆளுநர் முடிவெடுக்காவிட்டால் உச்ச நீதிமன்றத்தை நாடுவோம் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது.இதில் யாருக்கும் அறுதி பெரும்பான்மை கிடைக்காததால் மத சார்பற்ற ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி சேர்ந்து ஆட்சியமைப்பதில் முனைப்புடன் உள்ளது.இதில் ஆளுனரை சந்தித்து பாஜக மற்றும் காங்கிரஸ் தரப்பினர் ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளனர்.

இதில் பெங்களூருவில் காங்கிரஸ் கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் காங்.,- ம.ஜ.த கூட்டணிக்கு ஆதரவாக ஆளுநர் முடிவெடுக்காவிட்டால் உச்ச நீதிமன்றத்தை நாடுவோம். ஆளுநர் மாளிகை மற்றும் குடியரசுத் தலைவர் மாளிகை முன்பு எம்.எல்.ஏக்கள் அணிவகுப்பு நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory