» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கர்நாடகாவில பாஜ வெற்றி முகம்! மீண்டும் முதல்வர் ஆகிறார் எடியூரப்பா: 17-ம் தேதி பதவியேற்பு விழா

செவ்வாய் 15, மே 2018 11:27:38 AM (IST)

அதிக தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கிறது பாரதீய ஜனதா, மீண்டும் கர்நாடகா முதலமைச்சராகிறார் எடியூரப்பா. 17ம் தேதி பதவியேற்பு விழா நடக்கிறது. 

கர்நாடக சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை இன்று காலை முதல் துவங்கி நடந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி பாரதீய ஜனதா 115-க்கும்  மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.  இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் இங்கு ஆட்சி அமைக்கும். தற்போது தேவையான 113 க்கும் அதிகமான  இடங்களில் பாஜக  முன்னிலை  வகிக்கிறது.  அதிக தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கிறது. மீண்டும் கர்நாடகா முதலமைச்சராகிறார் எடியூரப்பா.

தனது இல்லத்தில் வழிபாடு நடத்திய பா.ஜ.க முதலமைச்சர் வேட்பாளர் எடியூரப்பா நிருபர்களிடம் கூறும்போது, 17-ம் தேதி பதவியேற்பு விழா நடக்கும் என்று தகவல் தெரிவித்து உள்ளார். பாஜகவின் எடியூரப்பா நாளை மறுநாள் (17-ஆம் தேதி) பதவியேற்பு விழாவுக்காக கன்டீராவா ஸ்டேடியத்தை முன்பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. தேர்தல் நடைபெற்ற நாளிலேயே 17-ஆம் தேதி பதவியேற்பு விழா என நாள் குறித்தவர் எடியூரப்பா என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தேவகவுடா கட்சியுடன் கூட்டணி என்ற பேச்சிற்கே இடமில்லை என பாரதீய ஜனதா  திட்டவட்டமாக கூறி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts
Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory