» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வாக்கு கேட்க பாஜகவினர் வர வேண்டாம்: கேரள வீடுகளில் எதிர்ப்பு வாசகம்

ஞாயிறு 15, ஏப்ரல் 2018 9:47:58 AM (IST)வாக்கு கேட்க பாஜகவினர் உள்ளே வர வேண்டாம் என்று கேரள மாநிலம் செங்கனூர் தொகுதிகளில் உள்ள வீடுகளில் எதிர்ப்பு வாசகம் எழுதப்பட்டுள்ளது. 

காஷ்மீரில் 8 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து கேரளாவில் உள்ள வீடுகளில் இடைத்தேர்தலுக்காக வாக்கு கோரி பாஜகவினர் உள்ளே வராதீர் , இந்த வீட்டில் 10 வயதில் சிறுமி இருக்கிறாள் என்று நோட்டீஸ் எழுதி வைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கேரள மாநிலம் செங்கன்னூரில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. 

இந்நிலையில் காஷ்மீர், உ.பி. பலாத்கார சம்பவங்களால் அதிர்ச்சி அடைந்த கேரளாவின் அந்த தொகுதி மக்கள் பாஜகவுக்கு எதிராக வாசகங்கள் அடங்கிய நோட்டீஸை கதவின் வெளியே மாட்டிவைத்துள்ளனர். ஒரே இரவில் அனைத்து வீடுகள் மற்றும் கட்டிடங்களில் தொங்கவிடப்பட்டுள்ள நோட்டீஸ்களில் உள்ள எழுத்துகளில் வித்தியாசங்கள் உள்ளன. அதாவது, இந்த வீட்டில் 10 வயதுக்குட்பட்ட சிறுமி இருக்கிறாள், வாக்கு கேட்க பாஜகவினர் உள்ளே வர வேண்டாம். கேட்டுக்கு வெளியே நில்லுங்கள் என்று எழுதப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


மக்கள் கருத்து

சாமிApr 16, 2018 - 04:09:42 PM | Posted IP 162.1*****

இது ஒரு சிலரின் காழ்ப்புணர்ச்சி -

ராமநாதபூபதிApr 16, 2018 - 10:56:23 AM | Posted IP 141.1*****

இது அருமையான எதிர்ப்பு. இது இந்தியா முழுவதும் தொடரவேண்டும்

பாலாApr 15, 2018 - 03:06:33 PM | Posted IP 172.6*****

கூடிய சீக்கிரம் வடநாட்டுலயும் வைப்பானுங்க..

தமிழன்Apr 15, 2018 - 12:07:57 PM | Posted IP 162.1*****

இது கொஞ்சம் ஓவர் ......

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory