» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தென்மாநிலங்களின் வரியை வடமாநில வளர்ச்சிக்கு ஒதுக்கீடு : சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு

செவ்வாய் 13, மார்ச் 2018 7:58:35 PM (IST)

தென்மாநிலங்களின் வரியை, வடமாநிலங்களின் வளர்ச்சிக்கு ஒதுக்கீடு செய்வதாக ஆந்திரமாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார்.

ஆந்திர மாநில சட்டப்பேரவைக் கூட்டத்தில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது முதலமைச்சர் சந்திரபாப்யு நாயுடு பேசினார்.தென் மாநிலங்கள் தான் மத்திய அரசுக்கு அதிக வரி செலுத்துகின்றன. ஆனால் அந்த வரிப்பணம் முழுவதையும் வடமாநிலங்களின் வளர்ச்சிக்கே மத்திய அரசு ஒதுக்குகிறது. இது எப்படி சரியாகும் என கேள்வி எழுப்பினார்.

வரி என்பதே மக்கள் செலுத்துவது தான். அதை ஏன் மத்திய அரசின் நிதி, மாநில அரசின் நிதி என்று பார்க்க வேண்டும். ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து தர வேண்டும்.ஆந்திராவும் இந்தியாவின் ஒருபகுதி தான் என்று சந்திரபாபு நாயுடு கோபத்துடன் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory