» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

குஜராத்தில் 3வயது சிறுமி பலத்காரம் செய்து கொலை: மூதாட்டி கொலையில் கைதானவர் வெறிச்செயல்!!

புதன் 14, பிப்ரவரி 2018 3:43:19 PM (IST)

குஜராத்தில் 24 மணி நேரத்திற்குள் 70 வயது மூதாட்டியை கொன்று நகையை திருடியதுடன் 3 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர்

குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் வைதுகியா கடந்த 7ம் தேதியன்று மாலை 6 மணி அளவில் பாராபஜார் பகுதியில் வசித்து வரும் 70 வயது மூதாட்டியை கொன்று அவர் அணிந்திருந்த நகைகளை திருடி சென்றார். மூதாட்டியை கொலை செய்தது மற்றும் நகை திருடியது தொடர்பாக அவரை  கடந்த 10ம் தேதியன்று போலீசார் கைது செய்தனர். அதற்கு அடுத்த நாள் பி.டி.சி. மைதானம் பகுதியில் 3 வயது பெண் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. 

பிரேத பரிசோதனை செய்ததில் அந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது. இந்த குற்ற சம்பவத்துக்கும் வைதுகியா தொடர்பு இருப்பது முதலில் போலீசாருக்கு தெரியாது. மூதாட்டி கொலை தொடர்பாக கடந்த 13ம் தேதியன்று போலீசார் வைதுகியாவிடம் விசாரணை செய்தபோது அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். மூதாட்டியிடம் கிடைத்த நகையை விற்று கிடைத்த பணத்தில் மது அருந்தி விட்டு வரும் வழியில் அந்த சிறுமியை கடத்தி சென்று பி.டி.சி. மைதானத்தில் வைத்து 2 முறை பாலியல் பலாத்காரம் செய்து கல்லால் சிறுமியை அடித்து கொன்றுள்ளார்.


மக்கள் கருத்து

கார்த்திக்Feb 14, 2018 - 06:05:28 PM | Posted IP 61.3.*****

உடனடியாக மரண தண்டனை கொடுக்க வேண்டிய இந்த மாதிரி குற்றவாளிகளை ஜெயில், ஜாமீன், போதிய ஆதாரங்கள் இல்லாமல் விடுதலை... என்று வாய்ப்புகள் கொடுத்து சுதந்திரமாக சுற்றி திரிய விடுவதுதான் இந்திய நாட்டின் பரிதாப நிலை...

TAMILANFeb 14, 2018 - 05:43:22 PM | Posted IP 122.1*****

ஜீசஸ்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads




Thoothukudi Business Directory