» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அடுத்த 3 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட மாட்டேன்: மத்திய அமைச்சர் உமா பாரதி அறிவிப்பு

புதன் 14, பிப்ரவரி 2018 11:14:57 AM (IST)

உடல் நல குறைவு காரணமாக அடுத்த அடுத்த 3 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று மத்திய அமைச்சர் உமா பாரதி திடீரென அறிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசில் குடிநீர் மற்றும் சுகாதாரம் துறை அமைச்சராக உமா பாரதி உள்ளார். இந்நிலையில் அடுத்த 3 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று திடீரென அறிவித்துள்ளார். இது குறித்து உமா பாரதி கூறியதாவது: எனக்கு முழங்கால் மற்றும் முதுகில் பிரச்னை உள்ளது. தற்போது அதிலிருந்து விடுபட்டு வருகிறேன். எனக்கு ஓய்வு தேவைப்படுகிறது. 

எனவே அடுத்த 3 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட மாட்டேன். ராஜ்ய சபா உறுப்பினர் பதவிக்கு கூட போட்டியிட மாட்டேன். கட்சி தலைவர் அமித் ஷா கேட்டுக் கொண்டதால் 2019ம் ஆண்டு வரை மத்திய அமைச்சராக தொடர்ந்து பணியாற்றுவேன். அதே சமயம் கட்சி கேட்டுக் கொண்டால் பிரசார பணிகளில் ஈடுபடுவேன். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே வேலை பார்ப்பேன் என்று அவர் கூறினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads




Thoothukudi Business Directory