» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கிறிஸ்துவர்களை ஜெருசலேத்துக்கு இலவசமாக அழைத்து செல்வோம்: பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி

புதன் 14, பிப்ரவரி 2018 11:11:59 AM (IST)

நாகலாந்தில் ஆட்சி பொறுப்பில் அமர வைத்தால் ஜெருசலேத்துக்கு கிறிஸ்துவர்களை இலவசமாக அழைத்து செல்வோம் என்று பாரதிய ஜனதா கட்சி தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

மேகலாயா திரிபுரா மற்றும் நாகலாந்து ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநிலங்களில் எப்படியும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் பா.ஜனதா உள்ளது. இந்த மாநிலங்களில் பெரும்பான்மையான மக்கள் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர்கள்.

இந்த நிலையில் நாகலாந்தில் ஆட்சி பொறுப்பில் அமர வைத்தால் ஜெருசேலத்துக்கு கிறிஸ்துவர்களை இலவசமாக அழைத்து செல்வதாக பா.ஜனதா தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளதாக வடகிழக்கு மாநில செய்தி நிறுவனத்தின் டிவிட்டரில் தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் இது நாகலாந்து கிறிஸ்துவர்களுக்கு மட்டுமா அல்லது நாட்டில் உள்ள அனைத்து கிறிஸ்துவர்களுக்குமா என்ற தகவல் சரியாக தெரியவில்லை. கடந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஹஜ் மானியத்தை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads




Thoothukudi Business Directory