» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கேரளா மாநிலம் கொச்சி கப்பல்தளத்தில் வெடிவிபத்து: நான்கு பேர் பரிதாப பலி

செவ்வாய் 13, பிப்ரவரி 2018 1:11:09 PM (IST)

கேரளாவில் கொச்சி கப்பல்தளத்தில்  ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு சொந்தமான கப்பலில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 தொழிலாளர்கள் பலியானர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

கொச்சி கப்பல்தளத்தில கடந்த சில நாட்களாக  ஓ.என்.ஜி.சி.க்கு சொந்தமான சாகர் புஷன் கப்பல் பழுதுபார்க்கப்பட்டு வருகிறது.  இன்றும் அந்த கப்பலில் பணியாளர்கள் பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.  இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் திடீரென கப்பலில் வெடிவிபத்து ஏற்பட்டது.இந்த வெடிவிபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பணியாளர்கள் பலியாகினர். 

மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இந்த வெடிவிபத்து குறித்து கேள்விப்பட்ட காவல் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மீட்பு குழுவினர் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.இந்த வெடிவிபத்து எதனால் ஏற்பட்டது என்ற தகவல் உடனடியாக கிடைக்கவில்லை


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads
Thoothukudi Business Directory