» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்த நிதி ஆண்டுக்கு தொழிலாளர்களின் பி.எப்.க்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்காது

செவ்வாய் 13, பிப்ரவரி 2018 12:13:52 PM (IST)

இந்த நிதி ஆண்டுக்கு தொழிலாளர்களின் பி.எப்.க்கு கடந்த நிதி ஆண்டில் வழங்கப்பட்ட 8.65 சதவீத வட்டியே கிடைக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (இ.பி.எப்.ஓ.)  அறங்காவலர் குழு தொழிலாளர்களின் பி.எப்.க்கான வட்டி விகிதம் குறித்து முடிவு எடுக்கும். கடந்த நிதி ஆண்டில் (2016-17) தொழிலாளர்களின் பி.எப்.க்கு 8.65 சதவீதம் வட்டி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 2015-16ம் நிதி ஆண்டில் தொழிலாளர்களின் பி.எப்.க்கு 8.80 சதவீதம் வட்டி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தொழிலாளர்கள் வருங்கால வைப்புநிதி அமைப்பின் அறங்காவலர் குழு கூட்டம் இந்த மாதம் 21ம் தேதி நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் தொழிலாளர்களின் பி.எப்.க்கு கடந்த நிதி ஆண்டில் வழங்கப்பட்ட 8.65 சதவீத வட்டியே இந்த நிதி ஆண்டுக்கு வழங்க அறங்காவலர் குழு முடிவு எடுக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இ.பி.எப்.ஓ. 2015 ஆகஸ்ட் முதல் பங்குகளில் பி.எப். பணத்தை முதலீடு செய்து வருகிறது. அதுமுதல் இதுவரை இ.பி.எப்.ஓ. சுமார் ரூ.44 ஆயிரம் கோடி பங்குகளில் முதலீடு செய்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads
Thoothukudi Business Directory