» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ப.சிதம்பரம் வீட்டில் வருமானவரி சோதனை: டெல்லியில் கார்த்தி சிதம்பரம் அலுவலகத்திலும் அதிரடி!!

சனி 13, ஜனவரி 2018 11:11:24 AM (IST)

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை நூங்கம்பாக்கத்தில் உள்ள ப.சிதம்பரம் வீடு, நூங்கம்பாக்கம் எல்டோரா அருகே உள்ள கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகம் மற்றும் டெல்லியில் உள்ள கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான இடங்களிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

காரைக்குடியிலுள்ள ப.சிதம்பரம் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 6 பேர் கொண்ட அதிகாரிகள் குழு இன்று காலை 7.30 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனை நடைபெறும் வீட்டில் ப.சிதம்பரம் இல்லை. அவரது மனைவி நளினி சிதம்பரம் மற்றும் அவரது மருமகள் உள்ளதாக கூறப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory