» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நடுரோட்டில் வைத்து பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர் கூட்டம்: 8பேர் கைது!!

செவ்வாய் 5, டிசம்பர் 2017 4:49:43 PM (IST)

ஒரிசாவில் உள்ள பர்கர் பகுதியில் கல்லூரி முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த பெண்ணிற்கு நடுரோட்டில் வைத்து சில இளைஞர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். 

இந்த வீடியோ செய்தி ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து ஒரிசா காவல் துறையினர் இந்தச் சம்பவம் குறித்த விசாரணையைத் துவங்கியுள்ளனர். அக்டோபர் 2, 2017 அன்று இந்தச் சம்பவம் நிகழ்ந்திருப்பதாகக் காவல் துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. வீடியோவில் இருந்த பலரும் துணியால் தங்களது முகத்தை மூடியிருந்த நிலையில் சிலரது முகங்கள் வீடியோவில் பதிவாகி உள்ளது. அதை வைத்துக் காவல் துறையினர் இது வரை எட்டு குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். 

ஹோட்சன் ஹாடி (24), அஜிட் பாரிக் (28), ஜெயபிரகாஷ் போஹி (31), உமகண்டா போஹி (39), ஷாஹில் பாரிக் (18), நிரோஜ் பாரிக் (38), ஜித்து பெஹிரா (24), முரளி பாரிக் (28) என இவர்கள் அனைவரையும் காவல் துறையினர் இரண்டு தனிப்படை அமைத்துப் பிடித்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் 15-ம் மேற்பட்ட இளைஞர்கள் ஈடுபட்டிருப்பதால் மற்றவர்களையும் தேடி வருவதாகக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒரு பெண்ணின் ஆடைகளைக் கலைத்து அதை வீடியோ பதிவு செய்து இணையத்தில் வெளியிட்ட 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.


மக்கள் கருத்து

தமிழன்Dec 7, 2017 - 12:47:02 PM | Posted IP 5.42.*****

கருத்து கூறிய பாலா அவர்களுக்கு ஒரு கேள்வி: அஸ்ஹவினி கற்பழிப்பு மற்றும் கொலை சம்பவம் எங்கே நடந்தது.

உண்மைDec 6, 2017 - 01:29:51 PM | Posted IP 122.1*****

மேலைநாட்டு கலாச்சாரங்கள் இந்திய மண்ணில் இருந்து விரட்டினால் ஒழுக்கம் தவறாது! ஜெய் ஹிந்த்!

nomanDec 6, 2017 - 11:26:01 AM | Posted IP 82.19*****

yenna oru eduthukattu, unmai urakka sollungal.

பாலாDec 5, 2017 - 05:39:37 PM | Posted IP 61.14*****

இந்த மாதிரி நடக்குறது எல்லாம் வடநாட்டுலதான்

உண்மைDec 5, 2017 - 05:25:12 PM | Posted IP 176.2*****

வருந்துகிறோம். இந்த இந்திய கலாச்சாரத்திலிருந்து மக்களை மீட்க சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory