» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஆயுள் தண்டனையை ரத்து செய்ய பேரறிவாளன் மனு: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

செவ்வாய் 14, நவம்பர் 2017 5:12:26 PM (IST)

ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்க கோரி பேரறிவாளன் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு 2 வாரத்தில் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர் பேரறிவாளன். 25 ஆண்டுகாலம் சிறையில் தண்டனை காலத்தை அனுபவித்துள்ளார். அவரது தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது. வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் பேரறிவாளன். உடல்நலம் குன்றியுள்ள தந்தையை கவனித்துக்கொள்ள 2 மாத காலம் பரோலில் வந்து சென்றார் பேரறிவாளன். இந்த நிலையில் தனது ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

26 ஆண்டுகளாக தாம் சிறையில் உள்ள நிலையில் தண்டனையை ரத்து செய்ய வேண்டும்.விசாரணையின் போது அதிகாரிகள் தனது வாக்குமூலத்தை சரியாக பதிவு செய்யவில்லை. எனவே தனது தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 2 வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே ராஜீவ் கொலை வழக்கில் விசாரணை ஆணையத்தின் விசாரணைகள் குளறுபடியோடு இருப்பதாகவும், ராஜீவ் காந்தியை கொலை செய்ய பயன்படுத்திய வெடிகுண்டு பற்றி விசாரிக்கபடாதது ஏன் என்றும் கேட்டு தொடரப்பட்ட வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory