» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

டெல்லியில் காற்று மாசுபாடு எதிரொலி : அரசு பஸ்களில் மக்கள் இலவச பயணம் செய்யலாம்

சனி 11, நவம்பர் 2017 12:03:19 PM (IST)

டெல்லியில் காற்று மாசுபாடு காரணமாக வாகனங்களுக்கு கட்டுபாடு விதிக்கப்பட்டுள்ளதால் அரசு பஸ்களில் மக்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் காற்று மாசுபாடுவதை தவிர்க்கும் விதமாக, திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் ஒற்றைப்படை பதிவு எண் வாகனங்களையும், செவ்வாய், வியாழன் ஆகிய நாட்களில் இரட்டைப்படை வாகனங்களையும் இயக்க அரசு முடிவு செய்தது. இதற்கான சோதனை ஓட்டம் 2 கட்டமாக கடந்த ஆண்டு நடந்தது.

2-வது கட்ட சோதனை ஓட்டம் தோல்வி அடைந்ததை தொடர்ந்து, அவசர காலங்களில் மட்டும் இத்திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இந்தநிலையில் தற்போது டெல்லியில் காற்று மாசுபாடு மிகுந்து கணப்படுவதால் அங்கு வருகிற 13-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை வாகனங்களுக்கான ஒற்றைப்படை, இரட்டைப்படை பதிவு முறை அமல்படுத்தப்படும் என கூறப்பட்டு உள்ளது.

இத்திட்டம் அமலில் இருக்கும் 5 நாட்களிலும் மக்கள் மாநில அரசு பஸ்களில் இலவசமாக பயணம் செய்யலாம் என மாநில போக்குவரத்து அமைச்சர் கைலாஷ் கெலாட் கூறி உள்ளார். இது மக்கள் அரசு போக்குவரத்துக்கு மாறுவதை ஊக்கப்படுத்தும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory