» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக யாரும் போராட்டம் நடத்தக்கூடாது : உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

வெள்ளி 8, செப்டம்பர் 2017 4:27:27 PM (IST)

நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் தனி நபரோ, அரசியல் கட்சியோ போராட்டம் நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்து உள்ளது.

மருத்துவ படிப்பில் சேருவதற்கான ‘நீட்’ தேர்வால் பாதிக்கப்பட்ட அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தை அடுத்து தமிழகம் முழுவதும் ‘நீட்’ தேர்வுக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் வக்கீல் ஜி.எஸ்.மணி என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.  

அதில் : அரசியல் காரணங்களுக்காக ‘நீட்’ தேர்வுக்கு எதிரான போராட்டம் என்ற பெயரில் மாணவர்களை தூண்டி விட்டு சில கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடுகின்றன. இது போன்ற தூண்டுதல் காரணமாகவே மாணவி அனிதா தற்கொலை முடிவுக்கு தள்ளப்பட்டு இருக்கிறார் என்று கருத முடிகிறது. எனவே மாணவி அனிதா தற்கொலை குறித்து ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் நீதி விசாரணை நடத்த உத்தரவிடவேண்டும். தமிழ்நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும். இது போன்ற சட்டவிரோதமான போராட்டங்களுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கூறி இருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது "நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் தனி நபரோ, அரசியல் கட்சியோ போராட்டம் நடத்த விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், தமிழக அரசு சட்டம், ஒழுங்கை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்   எனவும்   தமிழக தலைமை செயலர், முதன்மை செயலர்  ஆகியோர் பதிலளிக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக வகுப்பு புறக்கணிப்பு, சாலை மறியல் போன்ற போராட்டங்கள் நடத்தவும் உச்சநீதிமன்றம் தடை விதித்து உள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கொண்டுவரப்பட்ட நீட்டுக்கு எதிராக போராடக்கூடாது  நீட் தேர்வுக்கு எதிராக போராடுவது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என உச்சநீதிமன்றம் கூறி உள்ளது.


மக்கள் கருத்து

RajaSep 8, 2017 - 09:07:24 PM | Posted IP 117.2*****

மக்கள் கருத்தை கேட்காத நீதிமன்றம் எதற்கு ? நங்கள் அடிமைகள் இல்லை.

உண்மைSep 8, 2017 - 05:03:35 PM | Posted IP 122.1*****

அல்லக்கை முண்டங்கள் இனிமேல் போராடுமா?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory