ஸ்ரீகாந்த், விஷ்ணு கதாநாயகர்களாக நடிக்கும் துரோகி

ஸ்ரீகாந்த், விஷ்ணு கதாநாயகர்களாக நடிக்கும் துரோகி
பதிவு செய்த நாள் ஞாயிறு 15, ஆகஸ்ட் 2010
நேரம் 8:36:42 PM (IST)

இந்திரா இன்னோவேஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகியுள்ள படம் "துரோகி.' ஸ்ரீகாந்த், விஷ்ணு கதாநாயகர்களாக நடிக்கும் இப்படத்தை "ஆய்த எழுத்து', "யுவா', "குரு' உள்ளிட்ட பல படங்களில் இயக்குநர் மணிரத்னத்திடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய சுதா கே.பிரசாத் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார். பூஜா, பூர்ணா, பூனம் பஜ்வா ஆகிய மூவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். தியாகராஜன், கலை இயக்குநர் ராஜீவன் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்கள் ஏற்கிறார்கள்.



Thoothukudi Business Directory